உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய மலேசிய விமானம்

மலேசியாவில் இருந்து வந்த சிறிய ரக விமானம் ஒன்று, யாழ். சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (15) தரையிறங்கியுள்ளது.

மலேசியாவின் ஜோகூர் பாரு செனாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து வந்த அந்த விமானத்திற்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

குறித்த விமானம் இந்த ஆண்டு தரையிறங்கிய சிறிய ரக மூன்றாவது சர்வதேச விமானம் எனவும் , பிராந்திய விமான இணைப்புகளை வலுப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கவும், இலங்கையின் வடபகுதியில் சுற்றுலாவை மேம்படுத்தவும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

மேல் மாகாண ரயில் பயணிகளுக்கான அறிவித்தல்

பிக்கு உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் கைது

மின் கட்டணம் செலுத்த சலுகைக் காலம்