அரசியல்உள்நாடு

இரத்தினபுரி மருத்துவ சங்கத்தினால் ஒரு மில்லியன் ரூபாய் நன்கொடை!

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக இரத்தினபுரி மருத்துவ சங்கத்தினால் ஒரு மில்லியன் ரூபாய் நன்கொடையாக வழங்கி உள்ளது.

இதற்கான காசோலை நேற்று முன்தினம் (10) இரத்தினபுரியில் அமைந்துள்ள கேதுமதி மண்டபத்தில் வைத்து சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்னவிடம் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனக சேனாரத்ன, சப்ரகமுவ மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர, இரத்னபுரி போதனா வைத்தியசாலையின் இருதயநோய் சம்பந்தமான விசேட வைத்தியர் நிபுனர் சிந்தக்க அதலாவத்த மற்றும் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர்கள் உட்பட வைத்தியர்கள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

-இரத்தினபுரி நிருபர் சிவா ஸ்ரீதரராவ்

Related posts

கன்சியூலர் பிரிவின் சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம்

நாட்டைக் கட்டியெழுப்ப பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

சுமார் 370 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்