தேசிய மக்கள் சக்தி வசம் உள்ள தம்புள்ளை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 13 வாக்குகளும், எதிராக 14 வாக்குகளும் கிடைத்தன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தி ஒரு மேலதிக வாக்கால் தோல்வியடைந்தது.
பிரதேச சபையின் தலைவர் டபிள்யூ.எம்.திலகரத்ன தலைமையில் இன்று (11) இரண்டாவது முறையாக வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது.
எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
