உள்நாடு

இடியுடன் கூடிய மழை – பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, மின்னல் மற்றும் காற்றினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

மலேசிய முன்னாள் பிரதமருக்கு தண்டனைக் காலம் குறைப்பு!

இடியுடன் கூடிய கடும் மழை பெய்யும் சாத்தியம்

editor

கஜமுத்துக்களுடன் ஒருவர் கைது