ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக மரிக்கார் மொஹம்மட் தாஹிர் அவர்கள் நேற்றைய தினம் (05) சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
குறித்து நிகழ்வின் பின்னர் தனது முதலாவது விஜயமாக இன்றைய தினம் (06) புத்தளம், திகழி முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலுக்கு சென்று இருந்தார்.
ஊர்வலம், பட்டாசு கொளுத்தி, ஆரவாரம் இல்லாமல் மிகவும் அமையான முறையிலும், எளிமையான முறையிலும் குறித்த பள்ளிவாசலுக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை புத்தளம் மாவட்ட மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினார் முன்னாள் அமைச்சர், இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன்.
-UTV
