வீடு ஒன்றினுள் இயங்கிய நிலையில் ஜெனரேட்டரில் (மின்சார பிறப்பாக்கி இருந்து வெளியாகிய நச்சு வாயுவை சுவாசித்த நிலையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் குடும்பப் பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் இன்று (06) ஒப்படைக்கப்பட்டது
அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்முனைக்குடி 5 ஆம் பிரிவு புதிய வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இச்சம்பவம் வியாழக்கிழமை (04) இரவு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 54 வயதுடைய குடும்ப பெண்ணான அலியார் பஸ்மிலா என்பவரே மரணமடைந்தவராவார்.
காபன் மொனொக்சைட் காற்றுடன் கலந்து நஞ்சாகியதால் அதை சுவாசித்த நிலையில் குறித்த பெண்ணின் மரணம் சம்பவித்துள்ளது
மரண விசாரணை மற்றும் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.
-அம்பாறை நிருபர் பாறுக் ஷிஹான்
