உள்நாடு

71 நீர்த்தேக்கங்கள் வான் பாய்வதாக அறிவிப்பு – வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம்

நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்கள் உட்பட 71 நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்வதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

திணைக்களத்திற்குச் சொந்தமான நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவில் சுமார் 80 சதவீதம் தற்போது நிரம்பியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.

அதேநேரம், மல்வத்து ஓயாவை அண்மித்த பகுதிகளில் சிறிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (06) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

இலங்கையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு

editor

சமன் ரத்னப்பிரியவுக்கு ஜனாதிபதியினால் புதிய நியமனம்

பழங்களின் விலையும் சடுதியாக உயர்வு!