உள்நாடுபிராந்தியம்

தடைப்பட்ட மின்சார விநியோகத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மின்சார சபை ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்ட மின்சார விநியோகத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த மின்சார சபை ஊழியர் ஒருவர், ஹெட்டிபொல பகுதியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

நேற்று (03) பகல் போவத்த – வீரபொகுண பகுதியில் மின் தடையை சீர்செய்து கொண்டிருந்த போதே அவர் இந்த அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.

வீரபொகுண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், மேலதிக சிகிச்சைக்காக குளியாபிட்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்தார்.

குளியாபிட்டி, ஹெட்டிபொல பிராந்திய சேவை நிலையத்தில் பணியாற்றிய 41 வயதுடைய இலங்கை மின்சார சபை ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

கொவிட் 19 தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் அமுலுக்கு வருகிறது

குடு அஞ்சுவின் உதவியாளர் ஒருவர் கைது

வாகன உதிரிபாகங்களுக்கு தட்டுப்பாடு