வென்னப்புவ, லுணுவில பகுதியில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானி குரூப் கப்டன் நிர்மால் சியம்பலாபிட்டியவின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் உத்தியோகபூர்வ பணிகளுக்காக மேற்கொண்ட பல பயணங்களில் குரூப் கப்டன் நிர்மால் சியம்பலாபிட்டிய விமானியாக இணைந்து செயற்பட்டிருந்தார்.
