வகைப்படுத்தப்படாத

இயற்கை அனர்த்தம் காரணமாக 29 பாடசாலைகள் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன

(UDHAYAM, COLOMBO) – அனர்த்த நிலைமை காரணமாக மேல் மாகாணத்தில் மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

மேலும் சப்ரகமுவ மாகாணத்தில் 15 பாடசாலைகளும், தென் மாகாணத்தில் 10 பாடசாலைகள் உள்ளிட்ட 29 பாடசாலைகள் சில தினங்களின் பின்னர் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை அருகில் உள்ள பாடசாலையுடன் இணைந்து நடத்திச்செல்லவதற்குத் தேவையான அதிகாரம் வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

100 சீனத் தம்பதியினருக்கு இலங்கையில் திருமணம்

ஜனாதிபதி தலைமையில் இரத்தினபுரியில் விசேட பேச்சுவார்த்தை

அதிவேக வீதிகளில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை