உள்நாடு

சிவனொளிபாதமலைக்கான யாத்திரை 4ஆம் திகதி ஆரம்பம்!

சிவனொலிபாதமலை யாத்திரைக் பருவகாலம் எதிர்வரும் 4 ஆம் திகதி உந்துவப் போயா தினத்தில் ஆரம்பமாகிறது என்று ஸ்ரீ பாதஸ்தானாதிபதி அதி வணக்கத்துக்குரிய பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.

சிவனொலிபாதமலை யாத்திரை பருவம் காலம் நாளை மறுதினம் 04 ஆம் திகதி ஆரம்பமாகி 2026 வெசாக் பௌர்ணமி தினத்தில் நிறைவடையும் என்றும் அதி வணக்கத்துக்குரிய பெங்கமுவே தம்மதின்ன தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

பெல்மதுளை கல்பொத்தாவெல ஸ்ரீ பாத ரஜமஹா விஹாரை வளாகத்தில் அமைந்துள்ள சுமன சமன் ஆலயத்தின் விசேட அறையில் வைக்கப்பட்டுள்ள புனித நினைவுச்சின்னங்கள் அடங்கிய பேழை, சமன் தெய்வச் சிலைகள் மற்றும் பூஜைப் பொருட்கள் இன்று (02) முதல் நாளை (03) காலை வரை சமன் ஆலயத்தின் மண்டபத்தில் வைக்கப்பட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வருகின்றன.

நாளை 03 ஆம் திகதி காலை புனித நினைவுச்சின்னங்கள் அடங்கிய பேழை, சமன் தெய்வச் சிலைகள் மற்றும் பூஜைப் பொருட்கள் பெல்மதுளையில் இருந்து இரத்தினபுரி ஸ்ரீ பலாபத்தல வீதி, இரத்தினபுரி அவிசாவளை ஹட்டன் வீதி, இரத்தினபுரி குருவிட்ட எரத்ன வீதி, மற்றும் பலாங்கொடை ஆகிய நான்கு வீதி வழிகள் ஊடாக சிவனொலிபாதமலைக்கு எடுத்துச் செல்லப்பட உளளன.

மேற்படி பெல்மதுளை கல்பொத்தாவெல ஸ்ரீ பாத ரஜமஹா விஹாரைஇன்று (02) மாலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடு நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன,
பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், நாடாளுமன்ற உறுப்பினர்களான சுனில் ராஜபக்ஷ, வருண லியனகே, முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, சப்ரகமுவ மாகாண பிரதம செயலாளர் ஈ.கே.ஏ.சுனிதா, இரத்தினபுரி மாவட்டச் செயலாளர் கே.ஜி.எஸ்.நிஷாந்த உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நாளை மறுதினம் 04 ஆம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ பாத யாத்திரைக் காலம் ஆரம்பமாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

-இரத்தினபுரி நிருபர் சிவா ஸ்ரீதரராவ்

Related posts

மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தம்

பசிலின் தீர்மானம்

மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரங்கள்