முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவர் இன்று (02) கைது செய்யப்பட்டார்.
தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய வாக்குமூலம் அளிப்பதற்காக, முன்னாள் அமைச்சர் இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.
அங்கு அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே, அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
