உள்நாடு

A/L பரீட்சைகள் ஒத்திவைப்பு குறித்து வெளியான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களை 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்துவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அத்துடன், அனர்த்தத்தால் பாதிக்கப்படாத பல்கலைக்கழகங்கள், தேசிய கல்வியியல் கல்லூரிகள் மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் டிசம்பர் 08 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், அனர்த்தத்தால் பாதிக்கப்படாத மாகாணங்கள் மற்றும் மாவட்டங்களில் உள்ள பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் கைது

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளரானார் சனத் ஜயசூரிய

editor

ஈஸ்டர் தாக்குதலும் அரசின் காய் நகர்த்தல்களும் [VIDEO]