திருகோணமலை மாவட்டத்தில் நீடித்த கனமழை மற்றும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 22,232 குடும்பங்கள் மற்றும் 72,252 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருகோணமலை மாவட்டம் – பேரிடர் நிலை அறிக்கை (2025.12.02 – காலை 6.00 மணி நிலவரம்) அனர்த்த முகாமைத்துவ நிலையமா வழங்கிய தகவலின் அடிப்படையில்
இது வரைக்கும் வெள்ள அனர்த்தத்தினால் எவரும் உயிரிழக்கவில்லை பாதுகாப்பு மையங்கள் 61 இயங்குகின்றன இந்த மையங்களில் 5,228 குடும்பங்களிலிருந்து 15,775 பேர் தங்கியுள்ளனர் பகுதியளவு சேதமான வீடுகள் 476 என பதிவாகியுள்ளது.
திருகோணமலை முழுவதும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், வெள்ளநீர் தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது வெள்ளநீர் குறையும் வரை மக்கள் பாதுகாப்பு மையங்களில் தங்கியிருக்க அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
-கிண்ணியா நிருபர் ஏ. ஆர். எம். றிபாஸ்
