உள்நாடுபிராந்தியம்

சிலாபம் வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டது

கனமழை காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளான சிலாபம் பொது வைத்தியசாலை மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்படும் என வைத்தியசாலையின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுமித் அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலை தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், வைத்தியசாலைக்குள் ஐந்து அடிக்கும் மேல் நீர் நிறைந்துள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கவலைக்கிடமான நிலையில் உள்ள நோயாளிகள் விமானப்படை ஹெலிகொப்டர்கள் மூலம் கொழும்பு மற்றும் புத்தளம் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், ஏனைய நோயாளிகள் வெள்ள நீர் ஓரளவு குறைந்தத நிலையில், கடற்படை மற்றும் இராணுவத்தின் உதவியுடன் வாரியப்பொல மற்றும் குருநாகல் வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

அத்துடன், வெள்ளம் காரணமாக வைத்தியசாலையில் உள்ள CT ஸ்கேன் இயந்திரம் கூட சேதமடைந்துள்ளதாகவும், வாட்டுகள் வெள்ளத்தில் மூழ்கியதால் பல பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிட்டதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, வைத்தியசாலை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் மீண்டும் திறக்க வாய்ப்புள்ளதாகவும், அதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்று கூற முடியாது என்பதனால், மறு அறிவித்தல் வரும் வரை எந்தவொரு நோயாளியையும் சிலாபம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு வருவதைத் தவிர்க்குமாறும் வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சீரற்ற வானிலை – 31 பேர் உயிரிழப்பு

editor

விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் பதவி நீக்கம்

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரை