உள்நாடு

212 பேர் பலி – 218 பேரை காணவில்லை – 10 இலட்சத்தை நெருங்கும் பாதிப்பு

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (30) மதியம் வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கியுள்ளது.

இதுவரையான காலப்பகுதியில் 212 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அனர்த்தங்களில் சிக்கி 218 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட அனர்த்தங்களால் 2,73,606 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 9,98,918 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்காக நாடு முழுவதும் 1,275 பாதுகாப்பு மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 51,228 குடும்பங்களைச் சேர்ந்த 1,80,499 நபர்கள் தற்போது பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பணிகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

”இடுகம’ நிதியத்தின் மீதி 1511 கோடியை தாண்டியது

இணைந்து போட்டியிட்டதால் சிலிண்டரிடம் தேசியப்பட்டியல் எம்.பி பதவியை கோரும் சுதந்திரக் கட்சி

editor

இம்முறை ஹஜ் சென்ற இலங்கையர் கடமையின் போது வபாத்!