உள்நாடு

டித்வா புயல் குறித்து வெளியான தகவல்

“டித்வா” புயலானது தற்போது காங்கேசன்துறையிலிருந்து வடகிழக்கு திசையில் 210 கி.மீ தொலைவில் அகலாங்கு 11.4°N மற்றும் நெட்டாங்கு 80.6°E இற்கு அருகில் மையங்கொண்டுள்ளது.

இத்தொகுதி தொடர்ந்து நாட்டில் இருந்து விலகி வடக்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் இந்தியாவின் தமிழ்நாட்டு கடற்கரைக்குச் சமாந்தரமாக நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, நாட்டின் வானிலையில் புயலின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதன்படி, வடக்கு, மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணம் மற்றும் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வடக்கு மாகாணத்தில் மணிக்கு 50 கி.மீ வரை மிதமான பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக ஏற்படக்கூடிய பலத்த காற்றினால் மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துக்களை குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Related posts

அக்கரைப்பற்றில் கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு !

மாத்தளை – வில்கமுவ வனப்பகுதியில் பாரிய தீ

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 435 ஆக உயர்வு