அரசியல்உள்நாடு

மின் விநியோகம் உட்பட பல சேவைகள் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

மின்சார விநியோகம் உட்பட பல சேவைகள் அத்தியாவசிய சேவையாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஏனைய சேவைகளில், கனிய எண்ணெய் உற்பத்திப் பொருட்கள், சமையல் எரிவாயு உட்பட எரிபொருள் வழங்குதல் அல்லது விநியோகித்தல் என்பனவும் அடங்குகின்றன

அத்துடன், வைத்தியசாலைகள், நீர்வழங்கல் மற்றும் பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Related posts

பன்னிப்பிட்டிய சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது

இலங்கை வரும் சீன தடுப்பூசி சீனர்களுக்கே

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கு சேவை நலன் பாராட்டு விழா

editor