ஹசலக மினிப்பே பமுனுபுர பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 5 பேர் உயிரிழந்தனர்.
இந்த மண்சரிவில் மேலும் 12 பேர் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக கண்டி மாவட்டச் செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்தார்.
இதேவேளை, கேகாலை புலத்கொஹுபிட்டிய தேதுகல பகுதியில் தொடர் குடியிருப்புகள் மண்சரிவுக்கு உள்ளாகியுள்ளன.
5 வீடுகள் மண்சரிவில் சிக்கியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளதாக மாவட்டச் செயலாளர் ஜே.எம். ஹேரத் தெரிவித்தார்.
அதன்படி, அந்த வீடுகளில் வசித்த மக்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை மீட்பதற்காக அந்தப் பகுதியை அடைவது கடினமாக இருப்பதாகவும் மாவட்டச் செயலாளர் கூறினார்.
