உள்நாடு

மாணிக்க கங்கை தாழ்நிலப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும்

தற்போது நிலவும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக மாணிக்க கங்கையின் ஆற்றுப்படுகையில் உள்ள திஸ்ஸமஹாராம, கதிர்காமம் மற்றும் புத்தல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள நிலைமை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று (27) இரவு 10.00 மணிக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்ட அத்திணைக்களம், அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், அப்பகுதிகள் வழியாகப் பயணிக்கும் சாரதிகளும் இது குறித்து மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மாணிக்க கங்கை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் விலகி இருக்குமாறும், சப்பாத்துப் பாலங்கள் நீரில் மூழ்கக்கூடும் என்பதால், அப்பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Related posts

ஜோன்ஸ்டனுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வழக்கு

“பிச்சை எடுத்தாவது பிள்ளைகளுக்கு வேளைக்கு உணவை வழங்குவேன்”

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கை உயர் கல்வித் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்