அதிதீவிரமான வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் காரணமாக, நாளை (28) முதல் அனைத்துப் பாலர் பாடசாலைகளும் முன்பள்ளிப் பருவ அபிவிருத்தி நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம் இதனை அறிவித்துள்ளது.
இந்த அனர்த்த நிலைமைகள் தணியும் வரை இந்த அறிவிப்பு அமுலில் இருக்கும் என அந்த செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
