நாட்டில் மழையுடன் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதால் நாட்டில் பல்வேறு இடங்களில் அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று (27) வியாழக்கிழமை வாழைச்சேனை நீதி மன்ற வளாகத்தில் இருந்த பெரிய மரம் ஒன்று விழுந்ததில் சட்டத்தரணி ஹபீப் றிபானி அலுவலகத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், அலுவலகத்திலிருந்த ஆவணங்கள், பொருட்கள் ஆகியவற்றுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
குறித்த மரம் விழும் நிலையில் இருந்த போது இது தொடர்பில் இன்று காலை நீதி மன்ற பதிவாளர் வாழைச்சேனை பிரதேச சபைக்கு அறிவித்தும் அதற்கான தீர்வு கிடைக்காத நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-ஓட்டமாவடி நிருபர் எச்.எம்.எம்.பர்ஸான்
