உள்நாடு

கலாநிதி பி.எம்.பாரூக் அவர்களின் மறைவுக்கு அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி அனுதாபம்

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி பீ.எம். பாரூக் இன்று (27) காலை கொழும்பில் காலமானார்.

அன்னாரின் மறைவு சமூகப் பரப்பில் அதிகம் சேவை ஆற்றிய ஒரு சமூக சேவகரின் மறைவாகக் கருத முடியும். எண்பது வயது வரை அவர் சமூகத்துக்காக வேண்டி அயராது உழைத்த ஒரு மகத்தான தியாகி ஆவார்.

அவர் விட்டுச் சென்ற அடிச்சுவடிகளில் இளைஞர் சமுதாயம் பயணிக்க வேண்டியது அவருக்குச் செய்கின்ற சிறந்த நன்றிக் கடனாக அமைய முடியும் என அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் தேசியத் தலைவர் ஷாம் நவாஸ் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் குருநாகல் மாவட்டப் பணிப்பாளராக இருந்து பின்னர் வடமேல் மாகாண பணிப்பாளராக உயர்ந்து தேசிய செயற்குழுவில் அங்கத்தவராகி பின்னர் சம்மேளனத்தின் உப தலைவராகி தேசியத் தலைவர் வரை உயர்ந்தவராக கலாநிதி பீ.எம் பாரூக் காணப்பட்டார்.

தள்ளாத வயதிலும் துடிப்புடன் சமூகப் பணிகளில் ஈடுபட்ட இவரது வாழ்வு இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகும் எனவும் அவர் தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கலாநிதி பி எம் பாரூக் அவர்களின் ஜனாஸா இன்று இஷா தொழுகைக்குப் பின்னர் ஜாவத்தை ஜும்மா பள்ளி வாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

Related posts

காணாமல் போன ஊடகவியலாளரின் உடல் சடலமாக கரை ஒதுங்கியுள்ளது.!

லோட்டஸ் டயர் ஊக்குவிப்பு திட்டத்தில் வென்றவர்களுக்கு பேங்காக் சவாரியும் உள்நாட்டு சுற்றுலா பயணங்களுக்கும் ஏற்பாடு

editor

அவுஸ்திரேலியாவில் இலங்கை குடும்பம் மீது கொடூர தாக்குதல்!