நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி மாவட்டம் முழுவதும் அவசரகால அனர்த்த நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கண்டி மாவட்ட செயலாளர் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
மாவட்டத்தில் தொடரும் கடும் மழை, மண்சரிவு அபாயம் மற்றும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், மீட்பு மற்றும் நிவாரண பணிகளைத் துரிதப்படுத்தவும் இந்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
