உள்நாடுபிராந்தியம்

அம்பாறையில் கனமழை – வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் – மக்கள் அவதானம்

அம்பாறையில் பெய்து வரும் கனமழையால் கொண்டைவட்டுவான் குளம் நிரம்பி வழிகிறது.

இது தவிர அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் அம்பாறை கல்முனை பிரதான வீதிகளை இணைக்கும் மாவடிப்பள்ளி-காரைதீவு செல்லும் பிரதான வீதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதுடன் பொது மக்கள் அவதானமாக செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

மழை காரணமாக அம்பாறை கொண்டைவட்டுவான் குளத்தின் நீர் சுமார் ஆறு அங்குலம் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக அம்பாறை-இகினியாகல வீதியில் போக்குவரத்துக்கு சிறிய இடையூறு ஏற்பட்டுள்ளது.

கொண்டைவட்டுவான் நீர்த்தேக்கத்தைச் சுற்றியுள்ள வயல்களும் நீரில் மூழ்கியுள்ளன.மேலும் அருகில் உள்ள குளங்களின் நீர்மட்டம் உயர்ந்து நிரம்பி நீர் வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இகினியாகல சேனநாயக்க சமுத்திரத்தின் நீர்மட்டம் 77 அடி ஒன்பது அங்குலம் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதாக நீர்ப்பாசனத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் எக்கலோய நீர்த்தேக்கம் , பன்னல்கம குளம், நாமல் ஓயா நீர்த்தேக்கம், அம்பலனோயா குளம், ஆகியற்றின் நீர் மட்டங்கள் உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்பாறை குளத்தின் நீர்மட்டம் 6 அடி 9 அங்குலமாகவும் நிரம்பி வழியும் நீர்மட்டம் 13 அடியாகவும் உள்ளது. இதற்கிடையில் கனமழை காரணமாக கல்முனை மற்றும் சம்மாந்துறை பகுதிகளில் உள்ள நெல் வயல்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதே வேளை சம்மாந்துறை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தலை விடுத்துள்ளது.

வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்த கல்முனை மாநகர சபை துரித நடவடிக்கை மேற்கொண்டு முகத்துவாரங்கள் அனைத்தும் வெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு இப்பகுதியிலுள்ள அனைத்து முகத்துவாரங்களையும் திறந்து, வெள்ள நீரை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை கல்முனை மாநகர சபை துரிதமாக முன்னெடுத்துள்ளது.

கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி அறிவுறுத்தலின் பேரில் கல்முனை, சாய்ந்தமருது, மருதமுனை, பாண்டிருப்பு மற்றும் பெரியநீலாவணை பிரதேசங்களின் கடல் வாய் முகத்துவாரங்கள் தோண்டித் திறக்கப்பட்டுள்ளன.

-அம்பாறை நிருபர் பாறுக் ஷிஹான்

Related posts

பொத்துவில் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளர் கடமையேற்பு.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு

editor

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு சிறைத்தண்டனை