மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நெய்தல்நகர் பகுதியிலுள்ள வீடொன்றில் வைத்து பல்கலைகழக மாணவரொருவர் ஐஸ் போதைப் பொருளுடன் இன்று செவ்வாய்கிழமை (25) மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பல்கலைக்கழக மாணவனிடமிருந்து 10 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள், மூன்று கையடக்க தொலைபேசிகள், வங்கி புத்தகமொன்றும் மீட்கப்பட்டுள்ளது.
மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மூதூர் போதை ஒழிப்பு பிரிவு பொலிஸார் இவ் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மூதூர் பொலிஸார் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் இவரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
-முஹம்மது ஜிப்ரான்
