உள்நாடுகாலநிலை

200 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யும்!

தெற்கு அந்தமான் கடல் பகுதியை அண்மித்துப் உருவாகி வலுப்பெற்று வரும் குறைந்த காற்றழுத்த மண்டலம் காரணமாக இன்று முதல் எதிர்வரும் நாட்களில் மழை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், வடக்கு, வடமத்திய, கிழக்கு, தென், ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் 200 மில்லிமீற்றருக்கும் அதிக அளவில் மழை பெய்யக்கூடும் என உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீர் நிலைகளில் நீர் மட்டம் மிக அதிகமாக இருப்பதால், திடீர் மழையின்போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (25) முதல் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வெள்ளப்பெருக்கு அபாயம் நிலவுவதால், நீர்ப்பாசனத் திணைக்களம் வெளியிடும் முன் கூட்டிய வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்புகளின் மீது அனைத்து நீர்த்தேக்கங்களின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும், அந்தப் பகுதிகள் வழியாகப் பயணிக்கும் மக்களும் மிகுந்த கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தார்

editor

சஜித் முன்வைத்த நிபந்தனைகளால் பேச்சுவார்த்தை முறிவடைந்தது – புதிய கூட்டணியின் தலைவர் ரணில்

editor

இதுவரை 877 கடற்படையினர் பூரண குணம்