அரசியல்உள்நாடு

கந்தகெட்டிய பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் தோல்வி

தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்தின் கீழ் உள்ள கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்று (24) காலை தோல்வியடைந்தது.

கந்தகெட்டிய பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட ஆவணத்தை, இரண்டாவது முறையாகவும் தவிசாளர் ஹர்ஷ ரத்நாயக்க, எவ்வித திருத்தங்களும் இன்றி சபையில் சமர்ப்பித்ததுடன், அதற்கு தேசிய மக்கள் சக்தியின் ஆறு உறுப்பினர்கள் ஆதரவாக தமது வாக்குகளை அளித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் நான்கு உறுப்பினர்கள், பொதுஜன ஐக்கிய முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள், பொது முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள், அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் மற்றும் சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினர் ஆகியோர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

இதற்கமைய, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் போது 04 மேலதிக வாக்குகளால் கந்தகெட்டிய பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது நாளாகவும் இன்று தோல்வியடைந்தது.

Related posts

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு

editor

அமைதியற்ற முறையில் நடந்து கொண்டால் சபையிலிருந்து வெளியேற்ற நேரிடும் – அர்ச்சுனாவுக்கு பிரதி சபாநாயகர் கடுமையாக எச்சரிக்கை

editor

அனர்த்த நிலையால் 15 மாவட்டங்கள் பாதிப்பு – 2 பேர் பலி – 20,300 பேர் பாதிப்பு

editor