உள்நாடு

Amazon உயர்கல்வி நிறுவனத்தின் பிரம்மாண்ட பட்டமளிப்பு விழா!

சுமார் 17 வருடங்களாக உயர்கல்வித் துறையில் சேவையாற்றி வரும் Amazon College & Campus கல்வி நிறுவனத்தின் மாபெரும் பட்டமளிப்பு விழா, 2025 ஆம் ஆண்டு இன்றைய தினம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் – Lotus மண்டபத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வில், Diploma, HND, Degree, Masters ஆகிய நிலைகளில் கல்வி பயின்ற சுமார் 200 மாணவர்கள் தங்களது பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். குறிப்பாக, Psychology, Business Management, IT, English, Teacher Training போன்ற முக்கிய துறைகளில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில், பல்கலைக்கழக மானிய ஆணைகுழுவின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர், பேராசிரியர் Kshanika Hirimburegama அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

மேலும், மாண்புமிகு விருந்தினராக மலேசிய உயர் ஸ்தானிகராலயத்தின் ஆலோசகர் (Counselor, High Commission of Malaysia), திரு. Khairul Iskandar Md. Yusof அவர்கள் கலந்துகொண்டார்.

விசேட அதிதிகளாக, கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் (Former Vice Chancellor) Dr. Kumara Hirimburegama, பொருளியல் பேராசிரியர் Prof. Wasantha Athukorala, களனிப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறை பேராசிரியர் Prof. S.J. Yogarajah, கணினி மற்றும் தகவல் பள்ளியின் இணைப் பேராசிரியர் மற்றும் பீடாதிபதி Dr. Rishkan Basheer, மலாயாப் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் மற்றும் முதுகலை ஆராய்ச்சியாளர் Dr. U.L.M. Ashker, திருக்கோவில் கல்வி அலுவலகத்தின் வலயக் கல்விப் பணிப்பாளர் திரு. Rajgopaal Uthayakumar, இசுருபாயாவின் பிரதி கல்விப் பணிப்பாளர் திரு. S. Sethurathnam, ஹபீப் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஆலோசகர் திரு. Rushdhie Habeeb, அய்ன்சா ஹோல்டிங்ஸ் இணை நிறுவனர் மற்றும் குளோபல் மெடிக்கல் சேர்விசஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி Dr. Ajay Prasad, இலங்கை கனடா வர்த்தக சபையின் தலைவர் திரு. M.H.K.M. Hameez, கொழும்பு அசோசியேட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் திருமதி. Ajra Azhar ஆகிய பல பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Amazon உயர்கல்வி நிறுவனமானது கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் மூன்றாம் நிலைய தொழில்துறை கல்வி ஆணைக்குழுவின் (Tertiary and Vocational Education Commission – TVEC) கீழ் பதியப்பட்ட நிறுவனமாகும்.

இதுவரை சுமார் 8 விருதுகளைப் பெற்றுள்ள இந்நிறுவனம், 17 வருடங்களாக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வி வழங்கி, பல்வேறு சேவைகளில் முன்னணி வகித்து வருகிறது.

பம்பலப்பிட்டி காளி வீதியில், நான்கு மாடிக் கட்டடத்தில், அதிநவீன வசதிகளுடன் Amazon நிறுவனம் இயங்கி வருகிறது.
நிகழ்வின் நிறைவில், இந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ‘இல்ஹாம் மரிக்கார்’ அவர்கள், கல்வித் துறையில் மேலும் பல சேவைகளை வழங்க நிறுவனம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது கடலரிப்பு தொடர்பில் கொழும்பில் கூட்டம் !

ஊவா மாகாணத்தின் பிரதம செயலாளராக திருமதி பீ.ஏ.ஜீ. பெர்னாண்டோ நியமனம்

editor

நான்கு சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம் – வைத்தியர் கைது