அரசியல்உள்நாடு

ஆணவம் கொள்ளாமல் யதார்த்தத்தை புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் – சஜித் பிரேமதாச

76 வருட காலப்பகுதியில், எமது நாட்டில் குழந்தை மற்றும் தாய்வழி இறப்பு விகிதங்கள் குறைந்து, ஆயுட்காலம் அதிகரித்துள்ளன. பல குறிகாட்டிகள், பல தரவுகளைப் பார்க்கும்போது மக்களின் ஆரோக்கியம், ​​76 வருடங்களில் முன்னேற்றம் கண்டு வெற்றி கண்டுள்ளதைக் காணலாம்.

76 ஆண்டு கால சாபக்கேடு தொடர்பில் கூச்சலிடும் தற்போதைய அரசாங்கத்திற்கு, கடந்த 76 ஆண்டுகளில் நாட்டின் சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எந்தப் புரிதலும் இல்லை என்றே தெரிகிறது.

தற்போதைய அரசாங்கம் இந்த முன்னேற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல் விட்டாலும், உலக சுகாதார ஸ்தாபனம், UNICEF, UNISCO மற்றும் WPF போன்ற அமைப்புகள் இதற்கு அங்கீகாரம் வழங்குவது மகிழ்ச்சியளிக்கும் விடயமாக அமைந்து காணப்படுகின்றன என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கள் மீதான குழு நிலை விவாதத்தில் நேற்று (22) கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தொழிற்சங்க உறுப்பினர்களின் தேள்களில் ஏறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தொழிற்சங்கத்தினரின் முன்மொழிவுகளை ஏற்க வேண்டாம் என தற்போது தெரிவித்து வருகின்றனர்.

வைத்தியசாலை ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் தொடர்புடைய சுகாதார அதிகாரிகள் நிலவும் பற்றாக்குறை குறித்த தகவல்களை வழங்கும்போது, அதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அரசாங்கம் கூறுகிறது.

நோய் சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு ஆகிய இரண்டு துறைகளையும் உள்ளடக்கிய சுகாதாரத் துறையில் எமது நாட்டில் ஆயுட்காலம் 77.2 ஆண்டுகளாக காணப்படுகின்றன.

உலகில் 71.4 ஆண்டுகளாக காணப்படுவதோடு, தென்கிழக்காசியாவில் இந்த ஆயுட்காலம் 68.4 ஆண்டுகளாக காணப்படுகின்றன. 76 வருட சாபம் என இந்த அரசாங்கம் கூச்சலிடுவது இதற்குத் தான் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நமது நாட்டில் தாய்வழி இறப்பு விகிதம் 100 பிறப்புகளுக்கு 18.3 % ஆக அமைந்து காணப்படுகின்றது. தென்கிழக்கு ஆசியாவில் இது 96.3 % ஆகவும், உலகில் மொத்தமாக 197.3 % ஆகவும் அமைந்து காணப்படுகின்றன.

நமது நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 1000க்கு 4.1 % ஆக அமைந்து காணப்படுகின்றது. தென்கிழக்கு ஆசியாவில் இது 16.1 % ஆக காணப்படும் அதேநேரத்தில், உலகளவில் இது 17.3 % ஆக காணப்படுகின்றன.

இந்த முன்னேற்றங்கள் அனைத்தும் 76 வருட காலத்தில் அடையப்பட்டுள்ளன. இது 76 வருட சாபக்கேடு அல்ல என்பதை அரசாங்கம் அறிந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தனிநபர் செலவினத்தைப் பார்க்கும்போது, ​​நமது நாட்டில் குறைவாகச் செலவழித்து, உயர்தர சுகாதாரப் பராமரிப்பைப் பெற்றுத் தருகிறது.

ஐக்கிய அமெரிக்காவில் 12,434 ரூபா, நோர்வே நாட்டில் 9900 ரூபா, அயர்லாந்தில் 8200 ரூபா, ஜப்பானில் 5300 ரூபா, சுவிட்சர்லாந்தில் 10,300 ரூபா என்ற அடிப்படையில் தனிநபர் சுகாதார செலவினம் அமைந்து காணப்படும் வேளை நமது நாட்டில் 611 ரூபாவே தனிநபர் சுகாதார செலவீனமாக அமைந்து காணப்படுகின்றன.

76 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள், இலவச சுகாதார கொள்கையை வலுப்படுத்த பங்களித்தமையின் காரணமாகவே குறைந்த செலவில் உயர் குறிகாட்டிகளை எம்மால் அடைந்து கொள்ள முடியுமாக காணப்பட்டன.

சாபம் குறித்து பேசி பேசி பகடி செய்து வரும் இந்த அரசாங்கம், சுகாதாரத்துறையை முன்னேற்ற ஆர்வம் காட்டுமா என்பதில் சந்தேகம் நிலவுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

2012 ஆம் ஆண்டு நிலவரப்படி, நமது நாட்டின் மக்கள்தொகை வளர்ச்சியும் வைத்தியசாலை கட்டில்கள் வசதிகளின் எண்ணிக்கையும் 3.6 % அமைந்து காணப்பட்டன. தென் கொரியாவில் இந்த எண்ணிக்கை 12.8 % ஆகவும், ஜப்பானில் இந்த எண்ணிக்கை 12.6 % ஆகவும் காணப்பட்டன.

கட்டில் வசதிகள் மற்றும் நோயாளிகளின் விகிதத்தை பார்க்கும் போது இதனை அதிகரிக்க வேண்டும். 100,000 பேருக்கு தீவிர சிகிச்சை கட்டில்வசதிகள் 2.5 % ஆக காணப்படுகின்றன.

இதனை 50 % ஆக அதிகரிக்க வேண்டும். இந்த சூழ்நிலைகளுக்கு மத்தியில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

மருந்துப் பற்றாக்குறை

நாட்டில் பெரும் மருந்து தட்டுப்பாடு இருந்து வருகிறது. 218 வகையான மருந்துகள் களஞ்சியப்படுத்தப்படாமல் இருக்கின்றன.

அத்தியாவசிய உயிர் பாதுகாப்பு 160 வகை மருந்துப்பொருட்கள் களஞ்சியப்படுத்தப்படாமல் இருக்கின்றன.

அதேபோன்று தேசிய வைத்தியசாலை அறிவித்தல் பலகையில், அங்கு வைத்திய பரிசோதனை செய்யப்படாத வைத்திய சோதனைகள் என ஒரு அறிவித்தல் போடப்பட்டிருக்கிறது. இந்த வைத்திய பரிசோதனைகளை செய்ய முடியாமல் இருப்பதே இதற்கு காரணமாகும்.

அதனால் இதுதொடர்பில் தேடிப்பார்த்து, அரசாங்கம் தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும். வைத்தியசாலைகளில் பாரியளவில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு இருந்து வருவதுபோன்று உபகரணங்களுக்கும் தட்டுப்பாடு இருந்து வருகிறது.

வைத்திய பரிசோதனைகளை மேற்கொள்ள முடியாமல், சிகிச்சைக்கு வரும் நோயாளர்களை வெளியில் பரிசோதனை செய்து வருமாறு அனுப்புகிறார்கள்.

அரசாங்கம் வைத்திய துறைக்கு போதுமானளவு நிதி ஒதுக்காமல் இருப்பதே இதற்கு காரணமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதனால் எமது சுகாதாரத்துறை பாரிய வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

மேலும் விசேட வைத்தியர்கள் உள்ளிட்ட வேறு துறைகளைச்சேர்ந்த விசேட நிபுணர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றனர்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைமைக்கு முன்னர், வருடத்துக்கு 200 வைத்தியர்களே வெளிநாடு சென்றுள்ளனர். ஆனால் 2022, 2023 காலப்பகுதியில் 1800 பேர் வெளிநாடு சென்றுள்ளனர்.

இவ்வாறு நாட்டைவிட்டு செல்லும் விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் ஏனைய துறைசார் நிபுணர்களை தக்கவைத்துக்கொள்ள சுகாதார அமைச்சின் கொள்கை என்னவென எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கேள்வி எழுப்பினார்.

இலங்கையில் சாதாரண வைத்தியர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 58ஆயிரத்தி 305 ரூபாவாக காணப்படுகின்றது.

ஐக்கிய  இராஜ்ஜியத்தில் சாதாரண வைத்தியர்களின் அடிப்படை சம்பளம் 17இலட்சத்தி 555 ரூபாவாகும்.

இலங்கையில் விசேட வைத்தியர் நிபுணர் ஒருவரின் அடிப்படைச் சம்பளம் 88 ஆயிரம் ரூபாவாகும்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் 33 இலட்சம் ரூபாவாகும். இவ்வாறு இருக்கையில் இவர்கள், எமது  நாட்டில் தங்கி இருப்பார்களா?

Permit எமக்கு வேண்டாம்.

அதேபோன்று வைத்தியர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களின் நிலைமைகள் மிகவும் மோசமானதாக காணப்படுகின்றன.

அதேபோன்று வைத்தியர்களின் கொடுப்பனவுகள், அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை அதிகரிக்க ஏன் முடியாது? அதேபோன்று வைத்தியர்களுக்கு அரசாங்கத்தின் வாகன அனுமதி பத்திரம் (Permit) ஏன் வழங்க முடியாது? எங்களுக்கு வாகன அனுமதி பத்திரம் (Permit) தேவையில்லை.

நாட்டில் இருக்கும் உயர் தொழில் வல்லுனர்களுக்கு இதைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுங்கள்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகன அனுமதிப் பத்திரங்களை தொழில் வல்லுநர்கள், மருத்துவர்கள் மற்றும் பொறியிலாளர்களுக்குப் பெற்றுக் கொடுக்குமாறு நாம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம்.

யார் ஆட்சி செய்தாலும், இந்த தொழில் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறினால், நாடு வீழ்ச்சியைச் சந்திக்கும். வைத்தியர்கள் உள்ளிட்ட உயர் திறனுடையவர்கள் நாட்டைவிட்டு செல்லும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவர்களை தடுத்து நாட்டில் தக்கவைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்க தவறினால், யார் அரசாங்கம் செய்தாலும் நாட்டை முன்கொண்டுசெல்ல முடியாமல்போகும்.

ஆணவம் கொள்ளாமல் இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டில் வறுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை ஆளும் தரப்பு அமைச்சர்களுக்குத் தெரியாது.

உணவு மற்றும் உணவு அல்லாத செலவுகள் தற்போது அதிகரித்து காணப்படுகின்றன. இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்காமல் வெறுமனே அஸ்வெசும வழங்குவதால் பயனில்லை.

முந்தைய அரசாங்கத்தின் கொள்கைகளை தற்போதைய அரசாங்கமும் அதே முறையில் ஏற்றுக்கொண்டு, பின்தொடர்ந்து வருவது வருத்தமளிக்கும் செயலாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related posts

கட்டுப்பாட்டை இழந்த கார் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து – பலர் காயம்

editor

இதுவரை 298,162 பேர் பூரண குணம்

கடந்த 24 மணி நேரத்தில் 325 தொற்றாளர்கள் : மூன்று மரணங்கள்