உள்நாடுபிராந்தியம்

குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய சித்தப்பா கைது

தமது சகோதரனின் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் இன்று (23) சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த திருட்டு சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் இடம்பெற்ற நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, குழந்தையின் சித்தப்பாவான, 32 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் போதை பாவனைக்கு அடிமையாகியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-கஜிந்தன்

Related posts

மேலும் 415 பேர் குணமடைந்தனர்

துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்யப்பட்ட ஓய்வு பெற்ற சிறைச்சாலை அதிகாரி – 2 மோட்டார் சைக்கிள்கள் கண்டுபிடிப்பு

editor

அங்கொட லொக்காவின் ‘கழுகு’ கைது