அரசியல்உள்நாடு

மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைப்பு – பிரதி அமைச்சர் ரத்ன கமகே

மீன்பிடித்தொழில்துறையை கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துறையை மேம்படுத்துவதற்குரிய எமது வேலைத்திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்படும் என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.

அக்வா பிளான்ட் இலங்கை – 2025 சர்வதேச மீன்வள கண்காட்சி நேற்று (21.11.2025) கொழும்பு தாமரை கோபுரம் வளாகத்தில் ஆரம்பமானது.

கண்காட்சியின் 2ஆம் நாள் நிகழ்வான இன்று (22.11.2025) விவசாயத்துறை அமைச்சர் லால்காந்த பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார்.

நிகழ்வின் போது, சீரற்ற காலநிலை உட்பட இயற்கை அனர்த்தங்களால் மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாகி இருந்தன.

இந்நிலையில் இவற்றை தடுப்பதற்குரிய விடயங்கள் பற்றி ஆராய்வதற்கு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனால் குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது.

மேற்படி குழுவின் அறிக்கையும் அமைச்சரிடம் இன்று கையளிக்கப்பட்டது.

மீன்பிடி கைத்தொழிலின்போது எவ்வித குற்றமும் இழைக்காத, சட்டத்திட்டங்களின்போது செயல்பட்ட மாத்தறை, தங்கலை, காலி ஆகிய பகுதி மீனவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேற்படி இந்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் கிஹான், தர்மபிரிய திசாநாயக்க, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் டாக்டர்.

பீ.கே.கோலித்த கமல் ஜினதாச, கடற்றொழில் மற்றும் கடல்வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ். ஜே. கஹாவத்தே, அமைச்சின் அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. எமது அமைச்சின் 25 வருடகாலம் சேவையாற்றியவர்களுக்குரிய கௌரவிப்பும் இடம்பெற்றது.

கடல்சார் சட்டங்களை முறையாக பின்பற்றி செயல்படும் கடற்றொழிலாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

அனைத்து தரப்பினரதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்துள்ளது.

மீன்பிடி தொழில்துறையென்பது கடல் மற்றும் ஆறுகளுக்கு சென்று மீன்பிடிப்பது மட்டும் அல்ல. அதனை சார்ந்து பல விடயங்கள் உள்ளன.

எனவே, 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் அது பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மீன்பிடித்துறையைக் கட்டியெழுப்புவதற்காக வரவு- செலவுத் திட்டத்தில் 10.6 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரவு- செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின்போது மேலும் இரண்டு பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது. மீன்பிடி துறைமுகங்களை கட்டியெழுப்புவதற்கும் நிதி ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது.

இதற்கமைய மீன்பிடி கைத்தொழில்துறையை கட்டியெழுப்புவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்துவதே எமது இலக்காகும். அதற்கமைய மீன்பிடித்தொழில்துறையும் நவீனமயப்படுத்தப்படும்.

மீனவ குடும்பங்களை நாம் நேரில் சந்தித்து கலந்துரையாடி, பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றோம்.

மீன்பிடி தொழில்துறை மூலம் எமது நாட்டு பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்க வேண்டும்.

அந்திய செலாவணியை பெறுவதற்கு வழிசமைக்க வேண்டும். அதற்குரிய பங்களிப்பை நாம் வழங்க வேண்டும். ” என்றார்.

Related posts

பொத்துவில் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது – ஒருவர் பலி

editor

“அம்பன்” சூறாவளியின் தாக்கம் குறைவடையும்

சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும்