பிள்ளைகள் தொடர்ந்தும் போதைப்பொருள் அனர்த்தத்திற்கு இரையாவதைத் தடுப்பதே தனது நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்காத அரசாங்கமொன்று தற்போது அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எந்தவொரு போதைப்பொருள் கடத்தல்காரருக்கும் அரசியல் பாதுகாப்பு இல்லை எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
