அரசியல்உள்நாடு

ஜேவிபியின் செயலாளருக்கு பொலிஸ் பாதுகாப்பு – ஹர்ஷன ராஜகருணா எம்.பி

ஜேவிபி கட்சியின் செயலாளருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

பெலவத்தையில் அமைந்துள்ள ஜே.வி.பி. தலைமையகத்திற்கும் கட்சியின் செயலாளருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஜேவிபியின் செயலாளருக்கு பொலிஸ் பாதுகாப்பு | Police Protection For Jvp

நாடாளுமன்றில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டி உள்ளார்.

பெலவத்தையில் அமைந்துள்ள கட்சி தலைமையகத்திற்கும் கட்சியின் செயலாளருக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்க முடியுமானால் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் பாதுகாப்பு வழங்க முடியாது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொது மக்களின் பிரதிநிதிகள் எனவும் பாதுகாப்பு என்பது அவர்களது சிறப்பு உரிமை கிடையாது எனவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

புலனாய்வு பிரிவினர் எங்களை பாதுகாக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புலனாய்வு பிரிவின் தகவல்களை கூட்டங்களில் வெளியிடுவது பொருத்தமற்ற செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்துள்ளார்.

Related posts

தொடர்ந்தும் மழையுடன் கூடிய காலநிலை

ஜுவைரியா மொஹிதீனுக்கு 2020 Front Line Defenders விருது

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கல்முனை விஜயம்!