உள்நாடு

40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் மூவர் கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு விமான நிலையத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருந்த மூன்று பயணிகள் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர்களின் பயணப் பையில் 4 கிலோகிராம் 22 கிராம் மெத்தம்பேட்டமைன் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் மலேஷியாவின் கோலாலம்பூரிலிருந்து கட்டுநாயக்காவுக்கு வந்துள்ளனர், மேலும் அவர்கள் கொழும்பு மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளில் வசிப்பவர்கள்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (20) நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Related posts

தம்பியை வெட்டிக் கொலை செய்த அண்ணன்!

editor

மேலும் 248 பேர் பூரணமாக குணம்

அரச ஊழியர்கள் தொடர்பில் புதிய தகவல்