அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

BREAKING NEWS – ஓட்டமாவடி சபையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ் – தவிசாளராக ஹலால்தீன் தெரிவு!

கோரளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்ட எம்.எஸ்.ஹலால்தீன் சற்றுமுன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது, ஐக்கிய தேசிய கட்சி, சுயேற்சை உறுப்பினர், தமிழரசு கட்சி உறுப்பினர் என தலா ஒவ்வொரு உறுப்பினர்களும் ஆதரவுகளை வழங்கி இருந்த போதிலும் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஏலவே, தவிசாளர் பதவியை பெற்றுக்கொண்ட பைரூஸ் கட்சியின் தீர்மானத்தை மீறிய காரணத்தினால் அவரின் உறுப்பினர் பதவி நீக்கப்பட்டதைத்தொடந்து தவிசாளர் பதவிக்கான வெற்றிடத்திற்கான தெரிவு இன்று (20) காலை கிழக்கு மாகாண உள்ளூராட்சிமன்ற ஆணையாளர் அஸ்மி தலைமையில் இடம்பெற்ற போதே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சபையை கைப்பற்றியுள்ளது.

Related posts

சுகாதார விதிகளை மீறினால் அனுமதிப்பத்திரம் இரத்து

“பிச்சை எடுத்தாவது பிள்ளைகளுக்கு வேளைக்கு உணவை வழங்குவேன்”

பிரபல நடிகை தமன்னா இலங்கை வருகிறார்

editor