அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிரான வழக்கு குறித்து வெளியான தகவல்

அரச நிதியைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்குகளின் விசாரணைகளை ஒரு மாத காலத்திற்குள் முடித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று சட்டமா அதிபர் இன்று (19) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக தனக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தாக்கல் செய்திருந்த மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், வழக்கு விசாரணையைத் துரிதமாக முடிப்பதாகப் முறைப்பாடு தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்த காரணத்தால், தனது கட்சிக்காரருக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை நீக்குமாறு கோரி சமன் ஏக்கநாயக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் அந்த வேண்டுகோளைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர்.

Related posts

பலத்த காற்று வீசக்கூடும் – வெளியான அறிவிப்பு

editor

குடிவரவு மற்றும் குடியகல்வு துறைக்கு புதிய ஜெனரல்

சமல் ராஜபக்ஷவிற்கு இரட்டை இராஜாங்க அமைச்சு பதவி