உள்நாடு

14 வயது மாணவி துஷ்பிரயோகம் – ஆசிரியருக்கு விளக்கமறியல்!

14 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியரை டிசம்பர முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மொரட்டுவ நீதிவான் நேற்று (18) உத்தரவிட்டார்.

சம்பவத்தை மறைத்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அதிபரை, இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கவும் உத்தரவிடப்பட்டது.

மொரட்டுவ பொலிஸ் பிரிவில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலை ஆசிரியர் ஒருவர் 14 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காகவும் இந்தச் சம்பவத்தை மறைத்ததற்காக அந்தப் பாடசாலை அதிபரையும் மொரட்டுவ பொலிஸார் சமீபத்தில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பதுரலிய மற்றும் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடைய இருவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இன்றும் 261 பேர் நாடு திரும்பினர்

பேருந்து வீதி ஒழுங்கை சட்டத்தின் மூன்றாம் கட்டம் இன்று முதல்

ரயில்வே சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பம்