உள்நாடுபிராந்தியம்

மத்ரசா சிறுவனின் மரணத்தில் சந்தேகம் – பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு – கல்லூரி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை இணைப்பு

பதுளையில் வெலிமடை பகுதியில் உள்ள மத்ரஸா ஒன்றின் கழிவறையில் கடந்த 03 ஆம் திகதி சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

12 வயதுடைய சஹ்தி என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆரம்பத்தில் சிறுவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சிறுவனின் மரணம் குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த மரணம் கொலை எனவும், அதில் பள்ளியின் மௌலவி மீது சந்தேகம் இருப்பதாகவும் சிறுவனின் பெற்றோர் பண்டாரவளை பொலிஸில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தனர்.

மேலும், குறித்த மௌலவி சிறுவனை கொலை செய்து அதை தற்கொலை போல காட்ட முயற்சித்துள்ளார் என்றும் குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

நவ.02 ஆம் திகதி மாலை குறித்த சிறுவன் தன் தாத்தாவுடன் தொலைப்பேசியில் உரையாடியுள்ளதோடு, மறுநாள் காலை சிறுவன் சுகவீனம் காரணமாக நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையிலிருந்து குறித்த சிறுவனின் தந்தைக்கு அழைப்பொன்று வந்துள்ளது.

இதன் பின்னர், வைத்தியசாலைக்கு சென்று பார்த்தபோதே சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தெரிய வந்துள்ளது.

அதேசமயம் சிறுவன் இறந்தபின், மௌலவி குடும்பத்தாரைச் சந்திக்கவும் வரவில்லை எனவும், அந்த வகுப்பில் 60 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்த போதும், ஒருவரும் கூட சிறுவனின் வீட்டிற்கு வரவில்லை என்றும், சிறுவனின் தலையில் அடிக்கப்பட்டதை காட்டும் தழும்புகள் பல இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த பகுதியில் உள்ள மக்களும் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக கூறி, நேற்று முன்தினம் (14) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்துடன், சிறுவனின் மரணம் குறித்து விரிவான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை, 12 வயது சிறுவன் எவ்வாறு உயிரை மாய்த்துக்கொள்ள முடியும்? இது மர்மமாக உள்ளது என அப்பிரதேச மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

சில்மியாபுர மத்ரஸா மாணவின் மரணம் தொடர்பில் கல்லூரி நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது கீழே பார்வையிட முடியும்

Related posts

இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் – புகையிரத நிலைய அதிபர் சங்கம் தீர்மானம்.

புத்தாண்டு விடுமுறைக்காக மகளை அழைத்து வரச்சென்ற தந்தை விபத்தில் சிக்கி பலி

editor

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று