கிழக்கு மாகாண நிதி ஒதுக்கீட்டின் கீழ் முன்பள்ளிகள் கல்வி மற்றும் வசதிகள் அபிவிருத்திக்காக 73 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் அடிப்படையில் மூதூர் பிரதேசத்தில் உள்ள 25 பாலர் பாடசாலைகள் மேம்பாட்டு பணிகளுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
முன்பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் கல்வி சூழலை மேம்படுத்தும் நோக்கில், இந்த நிதியின் மூலம் நீர் இணைப்பு,மின்சார இணைப்பு,கட்டிட திருத்தம் மற்றும் பராமரிப்பு,கற்றல் கற்பித்தல் உபகரணங்கள்,தளபாடங்கள்,
சிறுவர் விளையாட்டு உபகரணங்கள்
உள்பட பல தேவையான உபகரணங்கள் மற்றும் வசதிகள் வழங்கப்பட்டன.
அபிவிருத்தி பணிகள் தொடர்பான கலந்துரையாடல் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து குறித்த உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று (15) மூதூர் பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வு தேசிய மக்கள் சக்தியின் மூதூர் அமைப்பாளர் சப்ரான் தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக மூதூர் பிரதேச செயலாளர் முபாரக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
மேலும் மூதூர் வலயக்கல்வி பணிப்பாளர் சிராஜ், தேசிய மக்கள் சக்தியின் கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள் ஆர். எம். றிபான, வி. றம்சி, என். எப். அப்ரினா, ரஜிதா ஆகியோர் உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்
பாலர் பாடசாலை ஆசிரியர்கள், தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
மூதூர் பிரதேசத்தில் முன்பள்ளி கல்வியின் தரத்தையும், குழந்தைகளின் ஆரம்பக் கல்வி சூழலையும் மேம்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நிதி ஒதுக்கீட்டும் கையளிப்பு நிகழ்வும் சமூகத்தில் பெரிதும் பாராட்டப்பட்டன.
-முஹம்மது ஜிப்ரான்
