அரசியல்உள்நாடு

பிரதேச சபைத் தலைவரின் அச்சுறுத்தலால் இளம் பெண் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய முடிவு

ஆராச்சிகட்டுவ பிரதேச சபைத் தலைவரின் நடவடிக்கைகள் காரணமாக, ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் 
உறுப்பினர் ஒருவர் தனது 
பதவியை இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார் .

தலைவர் அவரை திட்டி, மிரட்டி, சபையை விட்டு வெளியேற்றிய சம்பவத்தின் அடிப்படையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் .

இந்த முடிவை ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் இளைய உறுப்பினரான 
ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நிகினி அயோத்தியா எடுத்துள்ளார்.

வரவு-செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் தலைவர் இவ்வாறு நடந்துள்ளார்.

மேலும் இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட உறுப்பினர் பொவிஸிலும் முறைப்பாடு அளித்திருந்தார்.

இந்த சம்பவத்துக்கு பதிலளித்த தலைவர், தான் மிகுந்த அழுத்தத்தில் இருப்பதாகவும், சற்று கடுமையாகப் பேசியதாகவும் கூறினார்.

Related posts

சம்மாந்துறையில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

editor

அரச ஊடகங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

editor

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு