நாட்டில் வருடாந்தம் 250,000க்கும் அதிகமானோர் நாய்க் கடிக்கு ஆளாவதாக விலங்கு நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக பெருகி வருவதால் குறித்த சம்பவங்களும் அதிகரித்து பதிவாவதாக அந்த சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் சம்பா பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையை கட்டுப்படுத்த, நாய்களை கருத்தடை செய்யும் நடவடிக்கைகள் முறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் அமுல்படுத்தப்பட வேண்டும் என கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அவர் தெரிவித்துள்ளார்.
அங்கு கருத்து தெரிவித்த விலங்குகள் நலச் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் கிஹான் தினுஷ்க கூறியதாவது:
இலங்கையில் 20 முதல் 30 இலட்சம் தெரு நாய்கள் இருப்பதாக நாம் மதிப்பிட்டுள்ளோம். இது தொடர்பான உறுதியான கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்படவில்லை.
மதிப்பீட்டின் அடிப்படையில் 8 நபர்களுக்கு ஒரு நாய் வீதம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் வாகன விபத்துகள், மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்துகள் அதிகரிக்கின்றன.
நாய்க்கடி சம்பவங்களும் அதிகரிக்கின்றன.
எனவே, அரசாங்கம் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். சரியான வழிகாட்டலைப் பெற வேண்டும். இதை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்று நாங்கள் வழிகாட்டுவோம்.
அதைச் செய்து காட்டுவோம். அதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
