அரசியல்உள்நாடு

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

பாராளுமன்ற நிலையியற் கட்டளை 143 இன் பிரகாரம் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரின் போது சேவையாற்றுவதற்காகப் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தவிசாளர் குழாத்தின் கௌரவ உறுப்பினர்களிடையே (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன மற்றும் அரவிந்த செனரத் ஆகியோர் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்காக சட்டத்தரணி சாகரிகா அதாவுத மற்றும் (வைத்தியர்) செல்லத்தம்பி திலகநாதன் ஆகிய கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தவிசாளர் குழாத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (11) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

அதற்கு மேலதிகமாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான கவீந்திரன் கோடீஸ்வரன், கிங்ஸ் நெல்சன், எம்.கே. எம். அஸ்லம், உபுல் கித்சிறி, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்ஹ மற்றும் சுஜீவ திசாநாயக்க ஆகியோர் தவிசாளர் குழாத்தில் உள்ளடக்குவதற்கு பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக கௌரவ சபாநாயகர் அறிவித்தார்.

Related posts

காதலனுடன் சென்று காணாமற்போன யுவதி – கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு.

கணவன் மரணம் – மனைவி கைது – ஓட்டமாவடி, மாஞ்சோலையில் சம்பவம்!

editor

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம்