அரசியல்உள்நாடு

கணக்காய்வாளர் நாயகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

கணக்காய்வாளர் நாயகத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையை கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன அவர்களிடம் பதில் கணக்காய்வாளர் நாயகம் ஜீ.எச்.டீ. தர்மபால அவர்கள் பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் கையளித்தார்.

அரசியலமைப்பின் 154வது யாப்பின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனகள், சபைகள், அதிகார சபைகள், நியதிச்சட்ட நிதியங்கள், நியதிச்சட்டமல்லாத நிதியங்கள், வெளிநாட்டு உதவித் திட்டங்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களை 2024 ஆம் ஆண்டில் கணக்காய்வு செய்து அவற்றின் கணக்காய்வு அறிக்கைகளை பாராளுமன்றத்துக்கு சமர்பிப்பதற்கு கணக்காய்வாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதற்கமைய இந்த வருடாந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பிரதிக் கணக்காய்வாளர் நாயகம் எஸ்.டி.பி. ரத்நாயக்க, கணக்காய்வு கண்காணிப்பாளர் ஆர்.டீ. சேனாரத்ன மற்றும் கௌரவ சபாநாயகரின் ஒருங்கிணைப்புச் செயலாளர் சமீர கால்லகே ஆகியோரும் இதன்போது கலந்துகொண்டனர்.

Related posts

துப்பாக்கி சூட்டில் ‘கொஸ்கொட தாரக’ பலி

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3115

மேலும் சில பொருட்களின் விலைகள் குறைப்பு