உள்நாடு

நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளராக சட்டத்தரணி இர்பான் கடமையேற்பு!

நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளராக உப தவிசாளர் சட்டத்தரணி எம். ஐ .இர்பான்  கடமை ஏற்றுக் கொண்டார்.

இது தொடர்பான நிகழ்வு இன்று (10) நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதேச சபையின் உறுப்பினர் எம். ஏ. எம். றசீன், பிரதேச சபையின் செயலாளர் எஸ் சிஹாப்தீன், உட்பட பிரிவு தலைவர்கள் மற்றும் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளராக இருந்த ஏ.அஸ்பர் ஜே.பி அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து வெற்றிடமாகியுள்ள தவிசாளர் பதவிக்கு பிரதித் தவிசாளராக கடமையாற்றி வந்துள்ள சட்டத்தரணி எம் ஐ. இர்பான் பதில் தவிசாளராக உத்தியோகபூர்வமாக நியமிக்கப்பட்டார்.

-பாறுக் ஷிஹான்

Related posts

எரிபொருள் விலை குறித்து வெளியான மகிழ்ச்சியான செய்தி!

ரயில்வே பணிப்புறக்கணிப்பினால் ரயில் சேவைகள் பாதிப்பு

பிரதமரால் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்