உள்நாடு

இருவரைத் தாக்கி, லொறியை ஏற்றிக் கொலை செய்த சம்பவம் – 6 பேருக்கு மரண தண்டனை

அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்றதாகக் கூறப்படும் இரட்டை கொலைச் சம்பவம் தொடர்பிலேயே குற்றவாளிகளுக்கு எதிராக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த 6 பேரும் கெஹலஉல்ல பகுதியில் லொறி ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பிரதேச மக்கள் இருவரைத் தாக்கி, பின்னர் அவர்கள் மீது லொறியை ஏற்றிக் கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பான விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்று வந்த நிலையில் அவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து குறித்த 6 பேருக்கும் அம்பாறை மேல் நீதிமன்றம் மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Related posts

கடந்த கால ஆட்சியாளர்களின் நிலைக்கு மாற வேண்டாம் – ரிஷாட் எம்.பி | வீடியோ

editor

உயிரிழந்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி – கண்ணீருடன் தாயார்

editor

மூன்றாவது அலையை தடுக்க பொறுப்புடன் செயல்படவும்