சிலாபம் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் பொலிஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை (09) இரவு இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் சுமார் 40 வயது மதிக்கத்தக்கவர் எனவும், 05 அடி 06 அங்குல உயரம், மெல்லிய , சராசரி உடல் அமைப்பை உடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர் சிவப்பு நிற காற்சட்டை அணிந்திருந்ததுடன் அவரது வலது கையில் அடையாளம் தெரியாத பச்சை குத்தப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் அடையாளப்படுத்தியுள்ளனர்.
சடலம் சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
