உள்நாடுபிராந்தியம்

கிரிக்கெட் போட்டியின் போது கேச் பிடிக்க முயன்ற இருவர் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி

மினுவாங்கடை, அளுதெபொல பிரதேசத்தில் விளையாட்டு மைதானம் ஒன்றில் கிரிக்கெட் போட்டியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

போட்டியின்போது பிடியெடுக்க முயன்ற போது இருவர் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் ஒருவர் காயமடைந்து மினுவாங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் 41 வயதுடைய, பளுகஹவெல, கட்டுவெல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது – ரணில் விக்ரமசிங்க

இலங்கை மத்திய வங்கியினால் கண்காணிப்பு நடவடிக்கைகள்

10 நாட்களில் 578 அரிசி தொடர்பான சுற்றிவளைப்புகள்

editor