உள்நாடுபிராந்தியம்

போதைப்பொருள் பொதி செய்த வீடு சுற்றிவளைப்பு – ஆறு பேர் கைது

மஹரகம, பன்னிப்பிட்டிய பிரதேசத்தில் ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பொதி செய்து விநியோகிக்கும் வீடு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, அதன் பிரதான கடத்தல்காரர் உட்பட ஆறு பேர் நுகேகொடை குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வீட்டில் இருந்து சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களையும், அவற்றைப் பொதி செய்வதற்குப் பயன்படுத்தப்படும் பல உபகரணங்களையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

இதன்போது, 15 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், பொதி செய்யப் பயன்படுத்தப்படும் சீலர் இயந்திரம் ஒன்று, இரண்டு இலத்திரனியல் தராசுகள், ‘ஐஸ்’ போதைப்பொருளை அளவிடப் பயன்படுத்தப்படும் வெவ்வேறு அளவுகளைக் கொண்ட சிறிய அளவிடும் உபகரணங்கள் சில, சிறிய பொலித்தீன் உறைகள் மற்றும் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 16,800 ரூபா பணம் என்பன மீட்கப்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் 22 வயதுடைய இளைஞர் என்றும், ஏனைய ஐவரும் அவரிடம் இருந்து போதைப்பொருள் கொள்வனவு செய்வதற்காக அந்த வீட்டுக்கு வந்தவர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பன்னிப்பிட்டியவில் இளைஞர் ஒருவர் மாத வாடகையாக 20,000 ரூபா செலுத்தி வீடொன்றைப் பெற்றுக்கொண்டு பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பதிட்டத்திற்கு இணையாக, நுகேகொடை குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில், கொழும்பு கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் இருந்து பெறப்படும் ‘ஐஸ்’ போதைப்பொருளை இவ்வாறு பொதி செய்து விநியோகிப்பதாகத் தெரியவந்துள்ளது.

சந்தேகநபருக்குப் போதைப்பொருளை வழங்கும் பிரதான கடத்தல்காரர் யார் என்பதைக் கண்டறியும் விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

Related posts

ஹரின், நளின் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மேல்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டிய பணி நீக்கம்

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் இன்று