உள்நாடுபிராந்தியம்

காரின் சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியுடன் இருவர் கைது

வத்தளை பொலிஸ் பிரிவில் கைத்துப்பாக்கியுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (08) காலை இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்விஸ் டவுன் சந்தியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற கார் ஒன்றை வத்தளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் துரத்திச் சென்று நிறுத்தி சோதனை செய்துள்ளனர்.

இதன்போது அந்த காரின் சாரதியின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, குறித்த காரின் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் இந்த துப்பாக்கியை மற்றொரு நபரிடம் வழங்குவதற்காக எடுத்துச் சென்றமை தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து குறித்த நபரையும் வத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாபொல பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 33 வயதுடைய யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

பிட்கொய்ன் Bit coin நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வா?

வடக்கில் குற்றச்செயல்கள் முற்றாகக் கட்டுக்குள்வரும் – புதிதாகப் பதவியேற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் தெரிவிப்பு

இறக்குமதி மருந்துகளை விடுவிக்க விசேட குழு!